Sridevi Death Anniversary : அழகுலகின் ராணி..இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனங்களை ஆட்கொண்டவர் ஸ்ரீதேவி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்கள், இன்று வரை இவர் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன
தான் நடித்த படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்
தனது நான்காவது வயதில் ‘கந்தன் கருணை’ எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்த இவரை, சினிமா உலகம் அப்படியே பிடித்துக்கொண்டது
நல்ல நடிகை என்பதை தாண்டி, நல்ல மனிதராகவும் பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கியவர் ஸ்ரீதேவி
ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பர்க், ஜுராசிக் பார்க் படத்தில் சிறிய வேடத்தில் நடிக்குமாறு ஸ்ரீதேவியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் இந்திய சினிமா துறையில் அப்போது சாதித்து வந்த ஸ்ரீதேவி அதில் நடிக்க மறுத்து விட்டாராம்
தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வந்த ஸ்ரீதேவி 6 வருடங்களுக்கு நடிப்பில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டார். பிறகு, மாலினி ஐயர் என்ற டிவி தொடரில் நடித்து சிறந்த கம்-பேக் கொடுத்தார்
சினிமாவில் 15 வருடங்களுக்கு தலைகாட்டாமல் இருந்த ஸ்ரீதேவி, 2012-ல் வெளியான இங்கிலீஷ்-விங்க்லிஷ் படம் மூலம் மாஸான கம்-பேக்க் கொடுத்தார். இப்படம் ஹிட் அடித்தது
2018 ஆம் ஆண்டு தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக ஸ்ரீதேவி அவரது குடும்பத்தினருடன் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஒரு ஹோட்டலின் குளியலரையில் ஸ்ரீதேவி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது
ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்
ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக வழக்கு விசாரணைகளும் நடந்து வந்தது. முதலில் அவரது மரணத்திற்கு காரணம் மாரடைப்புதான் என கூறப்பட்டது. ஆனால், பல தரப்பு விசாரனைகளுக்கு பின்னர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதுதான் மரணத்திற்கு காரணம் என்று துபாய் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
திரையுலகின் அழகு ராணியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, இந்த மண்ணை விட்டு மறைந்த நாள் இன்று. இதனை அவரது ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் இவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -