Amala Paul Wedding Photos : ரகசியமாக நடந்து முடிந்த அமலா பாலின் திருமணம்..புகைப்படங்கள் இங்கே..!
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அமலா பால்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிலையில், 2011 ஆம் ஆண்டு வெளியான மைனா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இதன்பின்னர் தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி அமலா பால் தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அன்று அமலா பாலின் ட்ராவல் நண்பர் ஆன ஜகத் தெசாய், அவருக்கு ப்ரோபோஸ் செய்த வீடியோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் அமலா.
மேலும் அமலா பால் - ஜகத் தெசாய் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களது திருமண செய்தியை புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர். புதிய ஜோடிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.