Bhavatharini Evergreen Songs : மறைந்த பாடகி பவதாரிணியின் இளமை மாறாத பாடல்கள்!
இசைஞானி என போற்றப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று(25.1.2024) இரவு மரணம் அடைந்தார். அவர் பாடியுள்ள பாடல்களில் டாப் 5 பாடல்களை இங்கே பார்க்கலாம்.
1997 ஆம் ஆண்டு விஜய், ஷாலினி நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் உள்ள ’என்னை தாலாட்ட வருவாளா’ பாடல் இன்றளவும் இளமை மாறாமல் இருக்கிறது.
2000 ஆம் ஆண்டு வெளியான பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் இடம் பெற்றிருக்கும். இப்பாடலை பாடியதற்காக பவதாரிணி, தேசிய விருதை வென்றார்.
2001 ஆண்டு வெளிவந்த அழகி திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் என்றும் இசை ரசிகர்களின் மனதை வருடி கொண்டே தான் இருக்கும்.
2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்தில் வரும் ‘காற்றில் வரும் கீதமே’ பாடல் இசை ரசிகர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த தாமிரபரணி படத்தில் வரும் ‘தாலியே தேவயில்ல’ பாடல் என்றும் ரசிகர்களுக்கு இசை விருந்தாக இருக்கும் என்பதே நிதர்சனம்.