Top LVs views : டாப் 5 பாடல்களில் 4 பாடல் விஜய்தான்... ஒரே நாளில் அதிக வியூஸ் பெற்ற லிரிகள் வீடியோக்கள்!
தென்னிந்திய சினிமாவில் பாடல்களின் லிரிகள் வீடியோ வெளியாகி மில்லியன் கணக்கான வியூஸ்களை அள்ளிவிடுகிறது. அந்த வகையில் 24 மணிநேரத்திலேயே அதிகம் வியூஸ் பெற்ற பாடல்களின் டாப் 5 லிஸ்ட் பார்க்கலாமா...?
அனிருத் இசையில் 'லியோ' படத்தில் 'நான் ரெடி தான்...' பாடல் ஒரே நாளில் 16.55 மில்லியன் வியூஸ் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
எஸ். தமன் இசையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே...' பாடல் 16.68 மில்லியன் வியூஸ் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
எஸ்.தமன் இசையில் 'குண்டூர் காரம்' படத்தில் இடம்பெற்ற 'டம் மசாலா...' பாடல் 16.8 மில்லியன் வியூஸ் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
அனிருத் இசையில் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக் குத்து...' பாடல் 23.5 மில்லியன் வியூஸ் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் GOAT படத்தில் இடம்பெற்றுள்ள 'விசில் போடு..' பாடல் 25,5 மில்லியன் வியூஸ் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.