RCB vs SRH : ஆர்.சி.பியை பந்தாடிய ஹைதராபாத்..கடைசி வரை போராடி தோற்ற பெங்களூரு!

ஐ.பி.எல் 2024 இன் 30 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, அதிரடியாக விளையாடி 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. குறிப்பாக அந்த அணியின் ட்ராவிஸ் ஹெட், 41 பந்தில் 102 ரன்களை விளாசினார்.
அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளேஸிஸ் மற்றும் விராட் கோலி அதிரடியாக விளையாடி அவுட்டாக பெங்களூரு அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து விழ தொடங்கின.
அதன் பிறகு களமிறங்கி அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்களை குவித்து வெளியேறினார்.இறுதியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 549 ரன்களை குவித்தது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -