Highest-grossing Tamil films : 2023ல் வசூலை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்.. விஜய்தான் டாப்!
இந்தாண்டு வெளியாகி உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலை காணலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகளவில் 620 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மொத்தம் 615 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா,விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி, உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 350 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
இந்த வரிசையில் விஜய்யின் வாரிசு திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வாரிசு திரைப்படம் மொத்தம் 310 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது .
220 கோடி ரூபாயை வசூல் செய்த அஜித் குமாரின் துணிவு திரைப்படம் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.