Leo Release Date : ஒரு நாள் முன்பே வெளியாகும் லியோ..கமலா சினிமாஸ் கொடுத்த சூப்பர் அப்டேட்!
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து ஆன பின், அதை ஈடுகட்டும் வகையில் வரிசையாக அப்டேட்களை கொடுத்து வருகிறது செவன் ஸ்கிரீன் நிறுவனம்.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதனால், படத்தின் ப்ரோமோஷனுக்கான வேலைகள் தீவரமாக நடந்து வருகிறது. படக்குழு சார்பாக லோகேஷ் கனகராஜ், நேர்காணல் ஒன்றில் பங்குபெற்றுள்ளார்.
டூப் போடாமல் தானே சண்டை காட்சிகளை செய்வதாக விஜய் கூறியதாக லோக்கி தெரிவித்துள்ளார். படத்தில் வரும் ஒரு ஆக்ஷன் காட்சியை 20 நாட்களுக்கு ஷூட் செய்ததாகவும் கூறியுள்ளார்.
கமல், சூர்யா ஆகியோர் லியோவில் உள்ளனர் என்று பெரிய ஸ்பாய்லரை வழக்கம் போல் கொடுத்துள்ளார்.
ஒருபக்கம், இவர் பேசியவை அனைத்தும் ட்ரெண்டாக பிரபல சினிமா திரையரங்கான கமலா சினிமாஸ், “லியோ படத்தின் ப்ரிமீயர் காட்சி, தமிழ்நாட்டில் 18 ஆம் தேதியின் மாலையிலும் இரவிலும் திரையிடப்படலாம். படக்குழுவின் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்” என ட்வீட் செய்துள்ளது.
இதனால் தலை கால் புரியாத விஜய் ரசிகர்கள், கொண்டாட்டத்தில் உள்ளனர்