Harish uthaman : நடிச்சா நல்லாதா இருக்கும்.. விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் ஹரீஷ் உத்தமன்!

இளைஞர்களை கவர்ந்த லோகேஷ் மாஸ்டருக்கு பின் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
காஷ்மீரில் முதல் கட்டப்பிடிப்பு முடித்து சென்னைக்கு திரும்பிய இப்படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளது.

தற்போது கார்த்தி நடித்த கைதியில் அடைக்கலம் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ் உத்தமன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் எல்.சி.யூ பற்றி ஷேர் செய்துள்ளார்.
விஜய் ரசிகர்களின் இன்ஸ்டா பக்கத்தில் வந்த மீமில், லியோ யூ ஆர் இன் டேஞ்சர்.. ஐயம் நாட் இன் டேஞ்சர் ஐயம் தி டேஞ்சர் என்ற பிரேக்கிங் பேட் படத்தின் வசனம் இடம்பெற்றுள்ளது.
அந்த மீமை ஷேர் செய்து, ‘இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்..’என பதிவிட்டு விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுகிறார் என்பதை வெளிப்படுத்திருக்கிறார்.
தனி ஒருவன், தொடரி, ரெக்க, டோரா, ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -