திரையரங்கில் வெற்றி பெற்ற பார்க்கிங் ஓடிடியில் வெற்றி பெறுமா ?
ABP NADU | 30 Dec 2023 03:54 PM (IST)
1
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
2
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியான பார்க்கிங் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
3
பார்க்கிங் திரைப்படத்தை ப்ரமோஷன் செய்வதற்காக பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டார்.
4
எனினும் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. இதனால் படம் அந்த அளவிற்கு வசூல் செய்யவில்லை.
5
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் பார்க்கிங் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.
6
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்த பார்க்கிங் படம் தற்போது எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.