Kilambakkam Bus Terminus : இவ்வளவு வசதிகளா? வாயை பிளக்க வைக்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் கட்டமைப்பு!
88.52 ஏக்கர் பரப்பளவில், 6,50,698 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தின் முழு பயன்பாட்டின் போது நாள் ஒன்றுக்கு 1 லட்சம் மக்கள் பயணிக்கலாம்.
இந்த பேருந்து முனையத்தில் மருத்துவமனை, 4 உணவகங்கள், 100 கடைகள் உள்ளன. இவை அனைத்தும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
6 ஏக்கர் நிலப்பரப்பில் எழில்மிகு நீருற்று, நடைபாதையுடன் கூடிய பூங்காவும் உள்ளது
540 கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிட வசதிகளும் உள்ளன
இந்த பேருந்து முனையத்தில் 2,310 பேருந்துகள் தினம்தோறும் இயக்கப்படும்.
கலைஞர் கருணாநிதியின் அச்சு அசலான திருவுருவ சிலையும் பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -