Goundamani Best Comedy : கவுண்டமணியின் ஆல் டைம் ஃபேவரட் காமெடி சீன்ஸ்!
கரகாட்டக்காரன் - வாழைப்பழ காமெடி “டேய்...நான் உனக்கு எவ்வளவு பணம் குடுத்தேன்? எத்தனை பழம் வாங்கிட்டு வந்து இருக்க” என அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்க செந்தில் இதுதாங்க அது என அதே பதிலை சொல்லும் காமெடி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதாலாட்டு : வலையில் சிக்கும் செந்தில் பக்கத்துக்கு குப்பத்தில் இருந்து வந்த செந்திலுடன் சேர்ந்து கோவை சரளாவும் சேர்ந்து வித்தியாசமான பாஷை பேசி கவுண்டமணியை ஏமாற்றுவது.
சேதுபதி ஐபிஎஸ் : கப்பல் வேலை கப்பலில் வேலை கிடைத்துவிட்டதால் வேலை செய்து வந்த இடத்தில் வாய்க்கொழுப்பாக பேசுவதும். பின்னர் கப்பல் வேலை போலி என்பது தெரிந்ததும் மீண்டும் பழைய வேலையில் அவர் முயற்சி செய்வதும் வேடிக்கையானது.
சின்னத்தம்பி : மாலைக்கண் மாலைக்கண் நோய் உள்ள கவுண்டமணி அதை மறைந்து திருமணம் செய்து கொண்டு மனைவியை நைட் ஷோக்கு அழைத்து செல்லும் போது அவர் சமாளிப்பது.
மகுடம் - கல்யாண பெண்ணாக ஸ்ரீதேவியின் புகைப்படத்தை காட்டி ஏமாற்றுவது செந்தில் தன்னுடைய தங்கையை கவுண்டமணிக்கு திருமணம் செய்து வைப்பதாக ஸ்ரீதேவியின் புகைப்படத்தை காட்டி ஏமாற்றும் காமெடி.
சின்ன வாத்தியார் - காது கேளாத கோவை சரளாவை திருமணம் செய்து கொள்வது. காது கேளாத கோவை சரளாவை பிளான் பண்ணி செந்தில் தலையில் கட்ட திட்டம் போட கடைசியில் கவுண்டமணியே அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -