Ghilli Re - Release : 20 வருஷத்திற்கு பிறகும் மவுசு குறையல... உலகெங்கிலும் கொடி நாட்டும் விஜய்யின் கில்லி!
ஸ்ரீ சூரிய மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லி'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில் சாமி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்த இப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது.
நடிகர் விஜய் திரைப் பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது கில்லி.
இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 600 ஸ்க்ரீன்களில் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் கில்லி ரீ ரிலீஸ் படத்தை சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள்.
இது சம்பந்தமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
GOAT பாடத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்று இருந்த நடிகர் விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக 5746 கிலோமீட்டர் பயணித்து வந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான தன்னுடைய வாக்குகளை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -