Kalaignar 100 : 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கருணாநிதியின் கலை வாழ்க்கை !
தனது சிறு வயது காலம் முதலே தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவருக்கு திரைத்துறையில் முதல் வாய்ப்பாக அமைந்தது எம்.ஜி.ஆரின் 'ராஜகுமாரி' படம். இப்படத்தில் வசனகர்த்தாவாக தன் வாழ்க்கையை தொடங்கினார் கருணாநிதி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதனை தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதில் மறக்க முடியாத ஒரு படம் 'பராசக்தி'. இதில் இவர் எழுதிய வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
1940 - 50 காலகட்டங்களில் உருவான தமிழ் சினிமாவில் இடம்பெற்ற வசனங்களில் சமஸ்கிருதம், தெலுங்கு வார்த்தைகளை சேர்க்காமல், எளிமையான வசனங்களை அனைவருக்கும் புரியும் படி எழுதியவர் கருணாநிதி.
தமிழ் சினிமாவில் 69 படங்களில் பணியாற்றிய கருணாநிதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதிலும் மனோகரா மற்றும் பராசக்தி படங்கள் அவரின் மிக சிறந்த படைப்புகளாகும்.
அவரின் பெரும்பாலான படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட கருத்துகள், தீண்டாமை, சுயமரியாதை திருமணங்கள், சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும். மிகவும் ஆழமாக உடைத்து பேசும் வழக்கை தமிழ் சினிமாவில் கொண்டுவந்தவர்.
'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கியவர் எம்.ஆர். ராதா. இவ்வுலகை விட்டு இவர் பிரிந்தாலும் அன்று முதல் இன்று வரை அனைவராலும் கலைஞர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -