Father Based Movies : அப்பா கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்!
1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் அவ்வை சண்முகி. படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். மகளுக்காக தந்தை பெண் வேடம் அணிந்து நாடகமாடும் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராசு மதுரவன் இயக்கி 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாயாண்டி குடும்பத்தார். படத்தில் மணிவண்ணன் தந்தையாக நடித்திருந்தார். இதில் இடம்பெறும் “பரமா படி டா” என்ற வசனம் இன்றைக்கும் மீம்ஸ்களில் ட்ரெண்டாகி வருகிறதை பார்க்க முடியும்.
விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா கசாண்ட்ரா, டெல்லி கணேசன் ஆகியோர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் நகைச்சுவையாக இருந்தாலும் இதன் கிளைமாக்ஸ் காட்சி, தந்தையின் தியாகத்தை கூறும் வகையில் அமைந்திருக்கும்.
2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன். படத்தில் தனுஷ் தந்தையாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். மகனை இழந்த தந்தை மற்றொரு மகனை காப்பாற்ற எந்த எல்லைக்கு செல்கிறார் என்பதை வெற்றிமாறன் சிறப்பாக படமாகி இருந்தார்.
2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். வில்லனிடம் மாட்டிக் கொண்ட மகனுக்காக தந்தை செய்யும் சுவாரஸ்யமான செயலை மாஸாக காட்சிப்படுத்தி இருப்பார் நெல்சன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -