Dad Daughter Movies : வா வா என் தேவதையே.. அப்பா - மகள் உறவை அழகாய் காட்டிய தமிழ் படங்கள்!
2008 ஆம் ஆண்டு வெளிவந்த அபியும் நானும் படத்தை ராதா மோகன் இயக்கி இருந்தார். அப்பாவாக பிரகாஷ் ராஜும், மகளாக த்ரிஷாவும் நடித்து இருந்தனர். படத்தில் வரும் சில அப்பா மகள் காட்சிகள் கண்கலங்க வைக்கும் அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2011 ஆம் ஆண்டு விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த தெய்வ திருமகள். விக்ரமிற்கு மகளாக சாரா அர்ஜுன் நடித்து இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் விக்ரமின் நடிப்பு மிகவும் உருக்கமாக இருக்கும்.
2013 ஆம் ஆண்டு ராம் நடித்து இயக்கி இருந்த படம் தங்க மீன்கள். இந்த படத்தில் நா முத்துக்குமார் ஆனந்த யாழை என்ற பாடலை எழுதி இருந்தார். தந்தை மகள் பாடல் என்றால் இன்றைக்கும் நினைவிற்கு வரும் பாடலாக உள்ளது.
2015 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால். படத்தில் அஜித் அப்பாவாகவும் அனிகா சுரேந்திரன் மகளாகவும் நடித்து இருந்தனர். இந்த படத்தில் உனக்கென்ன வேணும் சொல்லு என்ற தந்தை மகள் பாடல் இடம் பெற்று இருக்கும்.
2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி. படத்தில் விஜய் அப்பாவாகவும் நைனிகா மகளாகவும் நடித்து இருந்தார். விஜயும் நைனிகாவும் இணைந்து வரும் காட்சிகள் குழந்தை தனமாகவும் க்யூட் ஆகவும் இருக்கும்.
2019 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கி இருந்த படம் விஸ்வாசம். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அஜித் குமார் அனிகா சுரேந்திரன் விஸ்வாசம் படத்தில் மீண்டும் இணைந்தனர். படத்தில் கண்ணான கண்ணே என்ற சென்டிமென்டல் பாடல் இடம் பெற்று இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -