TTF Vasan : ஹீரோவாக திரைத்துறையில் என்ட்ரீ கொடுக்கும் டி.டி.எஃப் வாசன்..299 கிமி வேகத்தில் படப்பிடிப்பு!
கோவைவை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசன். இவர் அதிவேகமாக பைக் ஓட்டி அந்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவ்வாறு இவர் வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி வீடியோக்கள் பதிவிட்டு வருவது பல இளைஞர்களுக்கும் தவறான முன்னுதாரணமாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும் சமூக இடங்களில் அதிவேகமாக பைக் ஓட்டி வாசன், போலிசாரிடம் சிக்கி அபராதம் கட்டுவது வழக்கமாகவே உள்ளது.
இத்தகைய சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி வரும் டி.டி.எஃப் வாசன், தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
அவர் நடிக்கும் படத்திற்கு மஞ்சள் வீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அவர் பிறந்தநாளான இன்று அந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ‘299 கிமி வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -