Editor Sreekar Prasad : சுவாதி முதல் பொ.சே 2 வரை 40 வருடகால சினிமா பயணத்தை கடந்த ஸ்ரீகர் பிரசாத்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என்ன 600 மேற்ப்பட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் ஸ்ரீகர் பிரசாத்.
ஸ்ரீகர் பிரசாத் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பட்டம் பெற்றவர். தனது தந்தையிடம் இருந்து படத்தொகுப்பு கலையை கற்றுக்கொண்டார்.
இவர் தெலுங்கு படங்களில் நடித்தாலும், தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்திருந்தார். ஏழு முறை சிறந்த எடிட்டிங்கிற்கான தேசிய திரைப்பட விருதையும் ஒரு சிறப்பு ஜூரி விருதையும் வென்றுள்ளார்.
பல மாணவர்களுக்கு அவர் எடிட்டிங் வகுப்புகளை எடுத்து வருகிறார்
படத்தொகுப்பு ஜாலரான ஸ்ரீகர் பிரசாத்தின் கைவண்ணத்தில் உருவான படங்கள் : யோதா (1992), நிர்ணயம் (1995), வானபிரஸ்தம் (1999), அலைபாயுதே (2000), தில் சஹ்தா ஹை (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), ஒக்கடு (2003), ஆயுத எழுத்து ,யுவா (2004), நவரசா (2005), ஆனந்தபத்ரம் (2005), குரு (2007), ஃபிராக் (2008), கமினே (2009), பழசி ராஜா (2009), குட்டி ஸ்ராங்க் (2010), ஷைத்தான் (2011), துப்பாக்கி ( 2012), தங்க மீன்கள் (2013), கத்தி (2014), தல்வர் (2015), செக்க சிவந்த வானம் (2018), சைரா நரசிம்ம ரெட்டி (2019), சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் (2020), ஆர்.ஆர்.ஆர் (2022), மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் (2022)
சினிமா துறையில் 40 வருட எடிட்டிங் பயணத்தை கடந்துள்ள அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.