Dropout Movies : கரிகாலன் முதல் சூதாடி வரை.. கைவிடப்பட்ட தமிழ் படங்கள்!
விஷால் மற்றும் கார்த்தியை ஹீரோவாக வைத்து பிரபு தேவா தயாரித்து, இயக்கவிருந்த படம் வெள்ளை ராஜா கருப்புராஜா. படத்தில் சமீரா ரெட்டி கதாநாயகியாக நடிக்கவிருந்தார். படத்தின் அறிவிப்புகள் வெளியாகி இருந்தும் படம் ட்ராப் அவுட் ஆகி விட்டது.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித் குமார் டாக்டராக நடிக்க ஒப்பந்தமான படம் திருடா. படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தும் சில காரணங்களால் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.
நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு இயக்கி, நடிக்கவிருந்த படம் வாலிபன். படத்தின் அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், சில காரணங்களால் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.
பொல்லாதவன் படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இரண்டாவது முறையாக இணைந்த படம் சூதாடி. சூதாட்டம் மற்றும் கேங்ஸ்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது என கூறப்படுகிறது. படத்தின் கதை வேறு சில காரணங்களால் மாற்றப்பட்டதால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது.
படையப்பா படத்தை தொடர்ந்து கே எஸ் ரவிக்குமாரும், ரஜினிகாந்தும் இணைந்த படம் ஜக்குபாய். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருந்தார். இருப்பினும் இந்த படம் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.
கண்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்த படம் கரிகாலன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏதிர்ப்பார்ப்பை தூண்டியது. இருப்பினும் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக படம் ட்ராப் அவுட் ஆகிவிட்டது என கூறுப்படுகிறது.