52 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் பிரபு தேவாவின் டயட் பிளான்! நீங்க ஷாக் ஆகாமல் இருந்தா சரி!
நடன இயக்குனராக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறி அதிலும் வெற்றி கண்டவர் தான் பிரபு தேவா.
ஹீரோவாக ஆசைப்படும், பல நடன இயக்குனர்களுக்கு இவர் ஒரு மிகப்பெரிய உதாரணம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இன்று தன்னுடைய திறமையின் மூலம் பலரை நிமிர்ந்து பார்க்கவைத்தவர்.
தமிழ் சினிமாவில் நடன புயல் என்று அழைக்கப்படும் பிரபுதேவா, பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர். இவரின் தந்தை ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதால், சினிமாவில் ஆரம்பத்தில் டான்ஸ் குரூப்பில் ஒருவராக ஆடி அதன் பிறகு நடன இயக்குனராக மாறினார்.
மேலும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என்று பன்முக கலைஞராக சினிமாவில் சாதித்துள்ள பிரபு தேவா. சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் தன்னுடைய 52 வயதிலும் உள்ளார்.
இவரிடம் ஒரு பேட்டியில், நீயா நானா கோபிநாத், உங்களின் டயட் பிளான் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டபோது, இதுகுறித்து பேசிய பிரபு தேவா... எனது டயட் நிலையானது இல்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என கூறினார்.
காலையில் ஓட்ஸ் சாப்பிடுவேன், ஜூஸ் குடிப்பேன். பிற்பகலில் சாப்பாடு கிடையாது. ஆனால், அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி ஆகியவற்றை 2 ஸ்பூன் எடுத்துக் கொள்வேன்.
இரவு நேரங்களில் ரெண்டே ரெண்டு இட்லி தான். அதோடு சாலட் மட்டும் எடுத்துக் கொள்வேன். இரவு 7 மணிக்குள்ளாக நான் சாப்பிட்டுவிடுவேன் இது தான் பெரும்பாலும் நான் கடைபிடிக்கும் டயட் என கூறியுள்ளார்.