Amir - Pavani Reddy Wedding: பிக்பாஸ் வீட்டில் துளிர்விட்ட காதல்... 3 வருடத்திற்கு பின் அமீரை 2-ஆவது திருமணம் செய்த பாவனி ரெட்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சில காதல் ஜோடிகள் உருவாவது உண்டு. அதே போல் வெளியே காதல் ஜோடிகளாக இருந்து, உள்ளே ரவீனா - மணி சந்திரா, அர்னவ் - ஆஷிதா போன்றவர்கள் பிரித்தும் சென்றுள்ளனர்.
இதையெல்லாம் தாண்டி பிக்பாஸ் மூலம் காதலிக்க துவங்கி, 3 வருட லிவிங் ரிலேஷன்ஷிப்புக்கு பின்னர் வெற்றிகரமாக தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர் அமீர் - பவானி ஜோடி.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பவானி ரெட்டி.தன்னுடைய கணவர் பிரதீப் மரணத்தின் சோகத்தில் இருந்து மீண்டு, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் உறவு திருமணத்திற்கு முன்பே முடிவுக்கு வந்ததது. இந்த காதல் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த பவானி, வேறு எதிலாவது தன்னுடைய கவனத்தை செலுத்த முயன்ற போது தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க, அதை ஏற்றுக்கொண்டு உள்ளே வந்தார்.
இதே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தவர் அமீர். பாவனி பற்றிய அனைத்து உண்மைகள் தெரிந்த பின்னரும் அவரை காதலிப்பதாக வெளிப்படையாக கூறினார். அதே போல் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
5வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட அமீரும், பாவனி ரெட்டியும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரது திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிக் பாஸ் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதே போல் பாவனி... வீட்டிலும் அமீரை காதலிக்க கூடாது என கூறினர்.
ஆனால் பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர் - பாவனி ஜோடி டான்ஸ் ஆடியபோது... அமீர் மீது காதல் வயப்பட்டார் பாவனி. பின்னர் பாவனி வீட்டிலும் இந்த காதலை ஏற்று கொண்ட நிலையில், சுமார் 3 வருடங்கள் இருவரும் லிங்க் ரிலேஷிப் முறையில் வாழ்ந்து வந்தனர்.
இதை தொடர்ந்து, இந்த ஆண்டு... அமீர் - பாவனி ரெட்டி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ள தகவலை அறிவித்தனர். இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்துள்ளது. இவர்களது திருமணத்தை விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் அவரின் கணவர் வசிஷ் ஆகியோர் முன்னின்று நடத்தி உள்ளனர்.
தற்போது அமீர் - பாவனி திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே தன்னுடைய முதல் திருமணத்தால், பல வலிகளை தங்கியுள்ள பாவனிக்கு இரண்டாவது திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் வாழ்த்தாக உள்ளது.