DNS update : இந்த மாலை D51 படத்தின் அசத்தலான அப்டேட்டுக்காக காத்திருங்கள்!
பொங்கலுக்கு வெளியான தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
அடுத்ததாக அவர் D50 படத்தை இயக்கி நடித்து வருவதோடு இளைஞர்களை கவரும் வகையில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி வருகிறார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் D51 படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்னர் துவங்கியது
நடிகர் நாகர்ஜுனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனுஷ் - நாகர்ஜுனா இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
ஜனவரி 24ம் தேதி தனுஷ் - ராஷ்மிகா நடிக்கும் கட்சியில் மும்பையில் படமாக்கப்பட உள்ளன
இன்று மாலை 4:05 மணிக்கு D51 படத்தின் ராக்கிங் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.