Rolls Royce Spectre: நாட்டின் விலையுயர்ந்த மின்சார கார் - தாறுமாறாக களமிறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்!
நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த மின்சார காராக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்டர் மாடலின் தொடக்க விலையே இந்திய சந்தையில் 7 கோடியே 50 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
5 மீட்டர் நீளத்தில் இது ஒரு பெரிய காராக இருந்தாலும், இரண்டு கதவுகளை மட்டுமே கொண்டுள்ளது. அதேநேரம், மிகப்பெரிய 23 இன்ச் ஏரோ ஆப்டிமைஸ்ட் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன
22 எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் ரேக்ட் புரொஃபைல் மூலம், மற்ற ரோல்ஸ் ராய்ஸ்களை விட கூடுதலான ஸ்போர்ட்டி தோற்றத்தை ஸ்பெக்டர் பெற்றுள்ளது
ஸ்பெக்டர் மாடலில் இடம்பெற்றுள்ள 102kWh பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 530 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்
900Nm டார்க்கை உருவாக்கும் இந்த கார் மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5 விநாடிகளில் எட்டுகிறது
நான்கு பேர் பயணிப்பதற்கான இட வசதியுடன், ஸ்பெக்டரில் கனெக்டட் கார் அம்சம் உள்ளது
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார் மாடல்களில் இதுவரை பொருத்தப்படாத அளவிலான, அகலமான கிரில் ஸ்பெக்டர் மாடலில் இடம்பெற்றுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -