Divya Dharshini: இவர் தான் டிடியின் புதிய காதலரா? தன்னை தூக்கியவர் யார் ரகசியத்தை உடைத்த திவ்ய தர்ஷினி!
தொலைக்காட்சிகளில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் திவ்யதர்ஷினி. டிடி என்றால் தான் இவரை பலருக்கு தெரியும். திவ்யதர்ஷினி சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக ஜூலி கண்பதி, நள தமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மாயம், காஃபி வித் காதல், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடிகையாக பார்த்ததை விட, இவரை ஒரு கலகலப்பான தொகுப்பாளினியாக பார்த்ததே அதிகம். அதுவும் விஜய் தொலைக்காட்சியில், ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். சமீப காலமாக அவரை தொகுப்பாளினியாக கூட பார்க்கமுடியவில்லை.
அதற்க்கு காரணம் அவரது உடல்நல பிரச்சனைகள் தான். ஆனால் அண்மையில் விகடன் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவர் தன்னுடைய நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவரது திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜாராஜா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை கூட டிடி தான் தொகுத்து வழங்கினார்.
இன்ஸ்டாகிவில் ஆக்டிவாக இருக்கும் டிடி, ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலர், டிடியின் புதிய காதலர் இவரா? என புகைச்சலை கிளப்ப அதற்க்கு டிடி... அவர் யார் ஒரு இன்ஸ்ட்டா பிரபலம். வெளிநாட்டில் தான் நான் லூகியை பார்த்தேன். அவர் சிங்கிளாகவே இருக்கிறார். அவருடன் தான் ரீல்ஸ் எடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியன் என்ற படத்தின் இப்படி இருந்தால் என்ற பாடலுக்கு தான் டிடி ரீல்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.