SivaKarthikeyan Son Birthday : 'என்னுயிர் அணுவில் வரும் உன் உயிர் அல்லவா...' உணர்ச்சி பொங்கிய சிவகார்த்திகேயன்!
சின்னத்திரையில் தோன்றி தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் மெரினா என்ற படம் மூலம் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன்.
அதை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுத்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்தார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் உருவான ’கனா’ படத்தில் ’வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடினார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. தன் தந்தையின் நினைவாக பிறந்த மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் சூட்டினார் சிவா.
தற்போது தனது மகன் குகன் தாஸின் முதலாவது பிறந்தநாளை ஓட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஹேப்பி பர்த்டே தம்பி’ என்று உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.