Thanga Meengal 10 Years : அப்பா - மகள் உறவை அழகாய் காட்டிய தங்க மீன்கள் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு!
கடந்த 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியானது தங்கமீன்கள். இந்த படத்தில் சாதனா, ஷெல்லி கிஷோர், ரோகினி, பத்மப்ரியா, லிசி ஆண்டனி, பூ ராமு, அருள்தாஸ் என பலரும் நடித்திருந்தனர்.
நிலையான வேலை, நிரந்தர வருமானம் இல்லாத அப்பா தன் அன்பு மகள் செல்லம்மாவை தேவதையாக வளர்க்க ஆசைப்படுகிறார். செயல்வழி கற்றலில் ஆர்வம் கொண்ட செல்லம்மா பள்ளியில் ஆசிரியரால் மட்டம் தட்டப்படுகிறார்.
மகளுக்கு ஃபீஸ் கட்டக்கூட வழி இல்லை என அப்பா, குடும்பத்தால் அவமானப்படுத்தப்பட இருவரும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள என்ன செய்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும்.
இப்படத்தில் ராமின் எதார்த்தமான நடிப்பு, மழலை உச்சரிப்பு, தெத்துப்பல் சிரிப்பு என ரசிகர்களை ரசிக்க வைத்தார் மகள் (சாதனா) இவர்களது நடிப்பு மக்களால் வெகுவாய் பாராட்டப்பட்டது.
மேலும் தங்க மீன்கள், “சிறந்த தமிழ் படம், சிறந்த பாடல், சிறந்த குழந்தை நட்சத்திரம்” ஆகிய 3 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
அதுமட்டுமல்லாமல், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், ஃபிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை தங்க மீன்கள் பெற்று ரசிகர்கள் மனதில் இன்றும் மின்னுகிறது.