HBD Pandiraj : ஜனரஞ்சகமான படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்த பாண்டிராஜின் பிறந்தநாள் இன்று!
ஜனரஞ்சகமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான சிறந்த 5 படங்களை பார்க்கலாம்:
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபசங்க : 2009ம் ஆண்டு வெளியான இப்படம் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார் பாண்டிராஜ். குழந்தை பருவத்து நினைவுகளை அசைபோட்டு இப்படம் இன்றும் பலருக்கும் ஃபேவரட். முதல் படத்திலேயே தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா : கிராமிய பின்னணியில் பேமிலி செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக விமல் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
கோலி சோடா : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் நான்கு சிறுவர்களின் வாழ்க்கையை சுற்றி நகரும் இந்த கதைக்களம் மக்களின் அபிமானத்தை பெற்றது.
கடைக்குட்டி சிங்கம் : ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசாக பிறந்த கார்த்தி குடும்பத்தின் ஒற்றுமைக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்ய குடும்பம் அவனுடைய அன்பை எப்படி புரிந்து கொள்கிறது என்ற திரைக்கதையை கொண்ட இப்படம் பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது.
நம்ம வீட்டு பிள்ளை : தன்னுடைய குடும்பத்திற்காகவும் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷுக்காகவும் தன்னுடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஹீரோ சிவகார்த்திகேயன் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து குடும்பத்தின் அன்பை பெறுகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -