6 Years Of Kaala : மும்பை டானாக களமிறங்கிய ரஜினி.. ஆறு வருடங்களை நிறைவு செய்த காலா!
அனுஷ் ச | 07 Jun 2024 01:14 PM (IST)
1
கபாலி படத்திற்கு பிறகு பா ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணி இரண்டாவது முறையாக காலா படத்தில் இணைந்தது. இந்த படத்தை தனுஷ் தயாரித்து இருந்தார்.
2
மும்பையில் தாராவி என்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என வில்லன் நினைக்கிறார். இதனை தாராவிக்கு தலைவனாக இருக்கும் ரஜினிகாந்த் தடுத்தாரா? இல்லையா ? என்பதே படத்தின் கதை.
3
வெளிப்படையான நில அரசியல் கருத்துக்களை காலா படம் மூலம் பேசியிருப்பார் இயக்குநர். படத்தில் ரஜினிகாந்தின் தோற்றம் இராமாயணத்தில் வரும் ராவணன் போல சித்தரிக்கப்பட்டிருக்கும்.
4
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மிக சிறப்பாக இசையமைத்து இருப்பார். குறிப்பாக ரஜினிகாந்த் என்ட்ரி பிஜிஎம் தனித்துவமாக இருக்கும்.
5
காலா படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இந்தியாவில் மொத்தமாக 1800 தியேட்டரிலும், தமிழ்நாட்டில் 700 தியேட்டரிலும் வெளியானது.