Lokesh Kanagaraj : “எனக்கு ஃபேஸ்புக்கில் கணக்கே இல்லை” போலி கணக்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபல வெற்றி படங்களை இயக்கி தற்போது தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
அடுத்ததாக கைதி 2, தலைவர் 171 படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளார் லோகேஷ்.
இந்நிலையில் அவர் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டுள்ள முகநூல் கணக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து லோகேஷ், எக்ஸ் தளத்தில் தான் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் தவிற வேறு எந்த சமூகவலைதளத்தை பயன்படுத்தவில்லை எனவும், தன் பெயரில் இணையத்தில் உலவும் மற்ற போலி கணக்குகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் கைதி 2 படப்பிடிப்பிற்கு முன்னதாக லோகேஷ் ஒரு குறும்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படம் LCU உருவான கதை பற்றியது எனவும் கைதி திரைப்படத்தில் நடித்த நடிகர் நரேன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -