Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
தனித்துவமான திரைக்கதை அமைப்பால் ஒட்டுமொத்த ஃபேமிலி ஆடியன்ஸையும் தன் வசம் ஈர்த்தவர் இயக்குநர் விசு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகதையை நம்பி மட்டுமே படம் எடுப்பவர். அவர் படத்தின் ஹீரோவும் கதையாக தான் இருக்கும்.
நாடக துறையில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர்.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
விசுவின் வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
குடும்பம் ஒரு கதம்பம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் உள்ளிட்ட டாக் ஷோக்களை நடந்து வந்தார். அவை இன்றும் மக்கள் மத்தியில் பதிந்த ஒரு நிகழ்ச்சி.
குடும்ப சப்ஜெட் படங்களை மட்டுமே தன்னுடைய ஸ்டைலாக கொண்டு இருந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் விசுவின் பிறந்தநாள் இன்று.
அவரின் படைப்புகள் மூலம் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -