தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் திரைக்கு வருவதற்கு சிரமங்களை சந்தித்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதுருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியாகும் என இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியையும் படத்தின் பாடல்களையும் ட்ரெய்லரையும் அடுத்தடுத்து வெளியிட்டு, தயாரிப்பு நிறுவனம் விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
எனினும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன் பின்னர் பேசிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்த தேதியில் வெளியாகவில்லை என்பது தனக்கும் வருத்தம் அளிப்பதாகவும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் தானும் பங்கெடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரியில் வெளியாகும் என பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -