GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!
தமிழ்த்திரை உலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரை உலகில் மிகவும் மதிப்பு மிக்கவராகவும் திறமை மிக்கவராகவும் போற்றப்படுகிறார். இவரது இசையில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டரானது. இந்த வருடத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.
பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தின் சூட்டிங் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இத்திரைப்படம் முடிந்த பிறகு வாடிவாசல் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் வணங்கான் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிப்பது உறுதியாகி சூட்டிங் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சில காரணங்களால் சூர்யா அப்படத்தை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் புறநானூறு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.