Dhruva Natchathiram : அடுத்த வாரம் வெளியாகும் துருவ நட்சத்திரம்.. ப்ரோமோஷன் வேலைகளில் பிசியான படக்குழு!
விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 24 தேதி வெளியாக இருக்கிறது.
துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நடிகர் விக்ரமிடம் சென்றது.
பிறகு நடிகர் விக்ரமை வைத்து ஷூட்டிங் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.
நிதி நெருக்கடியால் படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதமானது. பின்னர் நிதி நெருக்கடியை சரிசெய்து மீண்டும் படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த படக்குழு மீண்டும் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதை அனைத்தையும் சரி செய்யவே கெளதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்ததாக சமீபத்தில் மேடை நிகழ்ச்சியில் பேசினார்.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு.