Bison Movie : மாரி செல்வராஜின் பைசன் காளமாடன் பட ஷூட்டிங் இனிதே தொடங்கியது!
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'பைசன் காளமாடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், 'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது
இந்த தயாரிப்பு நிறுவனங்கள் வரும் நாட்களில், பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மே 6ஆம் தேதியான இன்று தொடங்கியது.
இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.