LGM Audio Launch : தோனியின் வருகையால் அதிர்ந்த சென்னை விமான நிலையம்.. ஆராவாரத்தில் ரசிகர்கள்!
பிரபல கிரிக்கெட் வீரரான தோனி சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிறுவனம் முதன்முதலாக தமிழ் படத்தை தயாராகிறது. கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது.
இப்படத்திற்கு லெட்ஸ் கேட் மேரிட் எனப் பெயரிடப்பட்டது. இதில் ஹரிஷ் கல்யாண்,இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்காக தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் சென்னை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -