Kolai Audio launch : ஹாலிவுட் தரத்திலான மேக்கிங்..இந்த மாதம் வெளியாகவிருக்கும் விஜய் ஆண்டனியில் கொலை படம்!
இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கொலை’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோரும் கொலை படத்தில் இணைந்துள்ளனர். சிவக்குமார் விஜயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதனிடையே கடந்த ஆண்டு கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஹாலிவுட் தரத்திலான மேக்கிங், வசனங்கள் என அனைத்தும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள கொலை படம் நீண்ட நாட்களாகவே ரிலீசாகாமல் இருந்தது.
தற்போது கொலை திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை சத்தியம் திரையரங்கில் இன்று நடக்கவுள்ளது.வ் மேலும் இப்படத்தின் 7 நிமிட காட்சிகளை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது
இப்படத்தை வருகின்ற ஜூலை 21 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.