Dhanush Lineups : மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநருடன் கைகோர்க்கிறாரா தனுஷ்?
தனுஷ் தனது 50-வது படமான ராயனை இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துவிட்டனர்.
கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் மீண்டும் இணைந்து இளையராஜாவின் பயோ பிக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா என்றே பெயரிடப்பட்டுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிக மந்தனா ஆகியோர் நடிக்கும் படத்திற்கு குபேரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் .
மலையாள சினிமாவை சேர்ந்த மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரத்துடன் தனுஷ் இணைந்து படம் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை தொடர்ந்து, அமரன் படத்தை இயக்கி வரும் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனுஷ் இணைத்து படம் நடிக்க போவதாகவு தகவல் பரவி வருகிறது.
தனுஷ் தயாரித்து, இயக்கி வரும் படமான நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படமும் இதற்கு நடுவில் வெளியாக வாய்ப்புள்ளது.