Dhanush : விமான படை அதிகரியாக தனுஷ்.. ராஞ்சனா இயக்குநருடன் மீண்டும் இணையும் குந்தன்!
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் .கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அசத்தி வரும் இவர் ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். முதலில் இப்படக்குழு சில பிரச்சினைகளில் சிக்கினாலும் இப்போது சுமூகமாக ஷூட் நடந்து வருகிறது.
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை அவரே இயக்க உள்ளாராம்.
இந்த படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன், மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே சூரியா மற்றும் துஷாரா விஜயன் , காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் முடிந்த பிறகு ராஞ்சனா இயக்குநரான ஆனந்த் எல்.ராயுடன் மீண்டும் இணையவுள்ளாராம்.
இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது ஹிந்தி திரைப்படமாக அமையும். இந்த படத்தில் தனுஷ் விமான படை வீரராக நடிக்க உள்ளதாவும், இப்படம் விமான படை சம்பந்தமான அதிரடி கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.