D51 : வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்..வெளியானது D51 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
லாவண்யா யுவராஜ் | 09 Mar 2024 11:47 AM (IST)
1
தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
2
அதை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் 'ராயன்'.
3
அடுத்தாக தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.
4
ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
5
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நேற்று படக்குழு வெளியிட்டது.
6
இப்படத்திற்கு 'குபேரா' என தலைப்பிடப்பட்டுள்ளது.