Maha Shivaratri 2024 : ஈசனே சிவகாமி நேசனே..பக்தர்கள் கூட்டத்தில் மூழ்கிய சிவாலயங்கள்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, மழையே சிவனாக காட்சியளிக்க கூடிய அஷ்ட லிங்கத்தையும் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் தோன்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவன், பார்வதி அம்மாள் நந்தி வாகனத்தில் அமர்ந்தவாறு சிறப்பு வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியிலுள்ள ஆரிய வைஸ்ய சமாஜம் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 5008 சங்குகளை கொண்டு பிரம்மாண்ட சிவன் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் உள்ள பழமையான திருக்கோவில்களில் ஒன்றான சுகவனேஸ்வரர் கோயிலில், இரவு 8 மணி முதல் 10 மணி வரை முதல்கால பூஜை நடந்தது.
இதேபோல், சேலம் மாவட்டத்தில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு பனிக்கட்டியால் 6 அடி உயரம் சிவலிங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என பாஜகவினர் வழிபாடு மேற்கொண்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -