Captain Miller : மூன்று பாகங்களாக உருவாகிறதா கேப்டன் மில்லர்? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புதிய தகவல்!
ஸ்ரீஹர்சக்தி | 17 Jun 2023 04:56 PM (IST)
1
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார்.
2
அருண் மாதேஸ்வரன் இதற்கு முன்னர் சாணிக் காயிதம், ராக்கி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
3
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். நிவேதிதா, சதீஷ், ஜான் கொக்கன் போன்ற பலரும் நடித்துள்ளனர்.
4
கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
5
பீரியட் படமாக உருவாகி வருவதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
6
1940-களில் நடப்பது போன்ற கதையாகவும் இரண்டாம் பாகம் 1990-களில் நடக்கும் கதையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜூன் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.