Actor Political journey: 'கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்த சினிமாதான்...' சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்கள்!
எம்.ஜி.ஆர் - திரைத்துறையில் வாத்தியாராக இருந்து அரசியலில் களமிரங்கி வெற்றி வாகை சூடியவர். சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிவாஜி - தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இணையாக இருந்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். நடிப்பில் கொடிகட்டி பறந்தாலும் அரசியலில் தோல்வியையே தழுவினார் சிவாஜி. பின்னர் அரசியலை கைவிட்டு மீண்டும் நடிப்புக்கே திரும்பினார்
பாக்யராஜ் - நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என்று பன்முக வித்தகனாக திரையில் கோலோச்சிய பாக்கியராஜ், ஒரு தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். 1989ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை பாக்யராஜ் தொடங்கினார் தொடக்கத்திலே தோல்வியை சந்தித்தார்.
டி.ராஜேந்திரன் - தமிழ் திரையுலகின் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டவர் டி.ராஜேந்திரன். தி.மு.க.வில் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றியவர். 2004ம் ஆண்டு லட்சிய தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார்.
கார்த்திக் - 2006ம் ஆண்டு அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியில் சேர்ந்தார்.பின்னர் 2009ம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். பின்னர், அந்த கட்சியை களைத்துவிட்டு 2018ம் ஆண்டு மனித உரிமைகள் காக்கும் கட்சியை தொடங்கினார். அரசியல் கட்சியில் அவரால் சோபிக்க முடியவில்லை என்பதே உண்மை.
விஜயகாந்த் - தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஓரளவு வெற்றி பெற்றவர் விஜயகாந்த்தான். 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார்.2011ம் ஆண்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.
கமல்ஹாசன் - திரையில் உலகநாயகனாக வலம் வந்த கமல் 2018ம் ஆண்டு மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கினார். போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் தோல்வியையே சந்தித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -