Deepika Padukone Pregnancy : பெற்றோராகவிருக்கும் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடி!
ஐஸ்வர்யா எனும் கன்னட படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானவர் தீபகா படுகோன். அதன் பிறகு, ஓம் சாந்தி ஓம், பாலிவுட் சினிமாவின் அறிமுக படமாக அமைந்தது.
தொடர்ந்து பேக் டூ பேக் ஹிட் படங்களில் நடித்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
கோச்சடையான், படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தார். தவிர்க்க முடியாத பெரும் புள்ளியாக இருக்கும் தீபகா, ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி ராம் லீலா, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி, 83 ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
இந்த இணையர் பெற்றோராகவுள்ளனர் என்ற தகவல் பரவி வந்த நிலையில், இன்ஸ்டாவில் வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாக ஸ்பெஷல் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார் தீபிகா.
தற்போது, இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்