Daniel Balaji : பாலாஜி டேனியல் பாலாஜியாக மாறிய கதை தெரியுமா?
சன் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி' சீரியல் மூலம் தான் அறிமுகமானார். அதில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் 'டேனியல் பாலாஜி' என்ற பெயர் அவரின் அடையாளமானது.
வேட்டையாடு விளையாடு படத்தின் அமுதன் சுகுமாரன் என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக ரசிகர்களின் கவனம் பெற்றார்.
பொல்லாதவன் படத்தில் ரவி என்ற கேரக்டரில் கேங்ஸ்டர் ஆக வேண்டும் வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அதை நோக்கி அடியெடுத்து வைப்பதை சிறப்பாக நடித்திருந்தார்.
வடசென்னை படத்தில் 'தம்பி' என்ற கதாபாத்திரத்தில் ஆன்மிகம், சமரசத்தை பேசும் வித்தியாசமான வில்லனாக நடித்திருந்தார்.
பைரவா படத்தில் கோட்டை வீரன் என்ற முக்கியமான வில்லனாக நடித்திருந்தார். ஜெகபதி பாபு மெயின் வில்லன் என்றாலும் டேனியல் பாலாஜி நடிப்பு ரசிகர்களின் கவனம் பெற்றது.
காக்க காக்க படத்தில் ஐ.பி.எஸ் ஸ்ரீகாந்த் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.