Custody : நயட்டு படத்தின் ரீமேக்கா கஸ்டடி....குழப்பத்திற்கு பதில் கொடுத்த வெங்கட் பிரபு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் படம் கஸ்டடி, அண்மையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தப் படம் நாளைத் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பிவிட்டிருக்கிறார் நெட்டிசன் ஒருவர்.
நேற்று முன்தினம் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பேசியாதவது, “கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான நயட்டு படம்தான் கஸ்டடி பத்தை எடுப்பதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.”
இந்த நிகழ்வைத் தொடர்ந்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் நயட்டு படத்தின் ரீமேக்தான் கஸ்டடி என்று வதந்தி ஒன்றை பரப்பிவிட்டுள்ளார்.
இதை கவனித்த வெங்கட் பிரபு, கஸ்டடி நயட்டு படத்தின் ரீமேக் இல்லையெனவும் நாளை படம் வெளியானப் பின் நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்வீர்கள் எனவும் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த வெங்கட் பிரபு, கஸ்டடி படத்தின் வழியாக தனக்கான புதிய அடையாளத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -