Google IO 2023 Highlights : ChatGPT க்கு டஃப் கொடுக்கும் Bard AI..உலகை மாற்றப்போகும் கூகுள் நிறுவனம்!
கூகுள் தனது முதல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. (Image source: Getty)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1800 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்த போனை, புத்தகம் போல் மடிக்கலாம்.வெளிப்புற டிஸ்ப்ளே 5.79 இன்ச் நீளம் கொண்டது. இன்னர் டிஸ்ப்ளே 7.69 இன்ச் நீளம் கொண்டது. இது இன்-ஹவுஸ் டென்சர் G2 சிப் மூலம் இயக்கப்படுகிறது.
கூகுள் அதன் போட்டியாளரான ChatGPTக்கு ஈடு கொடுக்கும் விதமாக Bard AI-யை இந்தியா உட்பட 180 நாடுகளில் திறந்துள்ளது. ஆங்கிலம் மட்டுமில்லாமல் Bard AI இப்போது ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகளை ஆதரிக்கிறது. மேலும் 40 மொழிகளிலும் இந்த ஆப்ஷன் அறிமுகப்படுத்தபடவுள்ளது. லாம்டாவை அடிப்படையாகக் கொண்டு உருவான Bard AI, ChatGPT-யை விட துல்லியமாக செயல்படும் திறனை கொண்டது.
பிக்சல் டேப்லெட் - 499 அமெரிக்க டாலர்களில் விற்பனையாகவுள்ள இது, ஸ்மார்ட் ஹோம் ஹப்பாகப் பயன்படுத்த வசதியாக இருக்கும். இது, சார்ஜிங் மற்றும் ஸ்பீக்கர் வசதியை கொண்ட டாக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிக்சல் டேப்லெட் 11 இன்ச் நீளமுடையது. நான்கு உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களால் ஆதரிக்கப்படுகிறது. 8 மெகாபிக்சல் பின்புற ஸ்னாப்பரை கொண்ட இது, முன்பக்கத்தில் மற்றொரு 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
PaLM 2 — Google I/O 2023 இல் புதிய பெரிய மொழி மாதிரியான (LLM), PalM 2 ஐ அறிமுகப்படுத்தியது. LLM களில் தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீட்டு முறை மற்றும் பகுத்தறிவைத் தவிர, PalM 2 பன்மொழி மொழிபெயர்ப்பை செய்யும் திறனையும் கொண்டுள்ளது.
Pixel 7a - 43,999 ரூபாய் மதிப்புள்ள இது, Tensor G2 SoC மற்றும் Titan M2 பாதுகாப்பு சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 64 மெகாபிக்சல் முதன்மை ஸ்னாப்பர் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்புடன் வருகிறது. Google Pixel 7a ஆனது 8GB+128GB ஸ்டோரேஜ் மாடலில் வருகிறது. சார்கோல், நீல, வெள்ளை நிறங்களில் விற்பனையாகவுள்ளது.
தேடல் - கூகுளின் சிறந்த தயாரிப்பான கூகுள் தேடலை அதிக திறன் கொண்டதாக மாற்ற, அதில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளனர். கன்வெர்ஸ் என அழைக்கப்படும் இந்த அம்சத்தை, மொபைல்களிலும், டெஸ்க்டாபிலும் பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 14 - ஈமோஜி, சினிமாடிக் மற்றும் ஜெனரேட்டிவ் AI, வால்பேப்பர், லாக்-ஸ்கிரீன் உட்பட, ஆண்ட்ராய்டு 14-ல் ஏற்படும் மாற்றங்கள் குறித்து டெமோ காட்டப்பட்டது.
Workspace AI - மொபைலில் உள்ள Gmail மற்றும் Docs ஆகிய செயலிகளில் பத்தியை சுருக்கமாக்குதல், ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் ஸ்மார்ட் ரிப்ளை போன்ற AI மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேப்ஸ் — கூகுள் மேப்ஸ் இறுதியாக பயனர்களுக்காக இம்மெர்ஸிவ் வியூ ஆப்ஷனை கொண்டுவந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு எளிதான புரில் ஏற்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் உலகளவில் 15 நகரங்களில் வழித்தடங்களுக்கான இம்மர்சிவ் வியூவை வெளியிட நிறுவனம் உத்தேசித்துள்ளது. வரும் மாதங்களில், ஆம்ஸ்டர்டாம், பெர்லின், டப்ளின், புளோரன்ஸ், லாஸ் வேகாஸ், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், மியாமி, பாரிஸ், சியாட்டில், சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ், டோக்கியோ மற்றும் வெனிஸ் ஆகிய இடங்களில் கூகுள் மேப்ஸில் இம்மர்சிவ் வியூ வெளியிடப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -