Ravaana kottam review : மதயானைக்கூட்டத்தை மிஞ்சியதா ராவணக்கோட்டம்? சாந்தனு படத்தின் குட்டி விமர்சனம் இங்கே!
‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கி சாந்தனு நடித்துள்ள திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தில் பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇராமநாதபுரம் மாவட்டம், ஏனாதியைச் சுற்றியுள்ள தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சிறு சிறு கிராமங்கள், அங்கு வசிக்கும் இரு வேறு சமுகத்தை சேர்ந்த மக்கள் இரு வேறு தலைவர்களின் வழிநடத்துதலின் கீழ் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை கிராமத்தில் இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினரின் முயற்சிகள் அரங்கேறுகின்றன.
சாந்தனு - ஆனந்தி காதல் இதற்கு பகடைக்காயாய் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? இரு பிரிவுகளிடையே கிராமத்தில் மூண்ட கலவரம் ஓய்ந்ததா என்பதே மீதிக்கதை!
நடிகர்கள் தங்கள் வேலைகளை சிறப்பாக செய்ய, ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை செய்கின்றன.
முதல் பாதி தமிழ் சினிமா பார்த்துப் புளித்துப்போன காதல் காட்சிகளுடன் நகரும் நிலையில், இரண்டாம் பாதி வேகமெடுத்து கதையுடன் ஒன்ற வைக்கிறது. முதல் பாதியில் போதிய கவனம்செலுத்தி, இந்தக் குறைகளை நிவர்த்தி செய்திருந்தால், இராவண கோட்டம் அதன் நோக்கத்தை பூர்த்தி செய்து கவனம் ஈர்த்திருக்கும்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -