Cinema Update : மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா விஜய்?
1997 மின்சார கனவு படத்தில் பிரபு தேவாவும் கஜோலும் இணைத்து நடித்தனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது
மைனா, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் விதார்த். இவர் நடித்துள்ள அஞ்சாமை என்ற படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தி கோட் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் பரவி வருகிறது.
2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக கூறப்பட்ட நிலையில், தடாக் 2 என்று தலைப்பிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தற்போது வேட்டையன் லுக்கில் ரஜினிகாந்த் கூலாக நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் செல்ஃபி எடுக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ வைரலாகி வருகிறது.
அஜித் குமார்- நயன்தாரா இணைந்து நடித்து வரும் படம் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில், எடுக்கப்பட்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.