Cinema Update : கோலிவுட் முதல் டோலிவுட் வரை.. இன்றைய சினிமா அப்டேட்கள் இதோ!
எ ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் லாக் டவுன். இந்த படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த நிலையில் படத்தின், லாவா லாவா என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநானி நடித்து வரும் சரிபோதா சனிவாரம் என்ற படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கி வருகிறார். இந்த படத்தின் கரம் கரம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஷங்கர் தயாள் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் வீர தீரா சூரன். இந்த படத்தின் போஸ்டர் டீஸர் என வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை முடித்துவிட்டதாகவும், அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களின் ஒப்பந்தத்திற்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்
பேன் இந்தியா லெவலில் பிரபலமான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் தென் இந்தியாவையே கலக்குற மாதிரி ஒரு கொலாபிரேஷன் குறித்த தகவல் இன்று வரும் என்று பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் தற்போது தெற்கு வடக்கு என்ற மலையாள படத்தில் ஓய்வு பெற்ற எலக்ட்ரிகல் இன்ஜினியராக நடிக்க உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -