Latest Cinema News : இந்தியன் 2 டிரைலர் முதல் கார்த்தியின் புது பட அப்டேட் வரை... சுட சுட சினிமா செய்திகள்!
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 'சர்தார் 2' திரைப்படம் உருவாக உள்ளது. கார்த்தி - ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துரை செந்தில் குமார் அடுத்து இயக்க இருக்கும் படத்தின் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளார். லெஜண்ட் சரவணனின் 'டெரர்' லுக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
'இந்தியன் 2' படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது.
'இந்தியன் 2' படத்தின் நடிகை சுகன்யாவின் கதாபாத்திரம் தேவியில்லாதது என்பதால் அது இருக்காது என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் ரிலீஸ் பல மாதங்களாக தள்ளி போன நிலையில் தற்போது செப்டம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வந்த 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் துவங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.