Cinema Updates : ரஜினியுடன் மாரி செல்வராஜ்.. கமலுடன் நாசர்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
வேட்டையன், கூலி உள்ளிட்ட படங்களை நடித்த பின் தனது 174 படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கைக்கோர்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது
சிம்பு தனது 48வது படத்திலும் கமலின் தக் லைஃப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நஸ்ரியா - நிவின் பாலி நடித்த ஓம் சாந்தி ஓஷானா படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசபின் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது
விஷ்ணு விஷால் தனது 21வது படத்தின் ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் சென்றுள்ளார் என்றும் இந்த படத்தை ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது
ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகும் அருள் நிதியின் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை 5:01 மணிக்கு வெளியாகவுள்ளது
கமலின் தக் லைஃப் படத்தில் நடிகர் நாசரும், நடிகை அபிராமி இணைந்துள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.